91 வது ஆண்டு விழா மலர் வெளியிடுதல் நிகழ்ச்சி டிசம்பர் 26, 2014
Correspondents and Head Masters of our CCM Higher Secondary School
[100-வது ஆண்டு] நூற்றாண்டு விழா கொண்டாட்டம் முன் ஏற்பாடுகள்
[100-வது ஆண்டு] நூற்றாண்டு விழா கொண்டாட்டம் 26-12-2023
![[100-வது ஆண்டு] நூற்றாண்டு விழா கொண்டாட்டம் 26-12-2023 [100-வது ஆண்டு] நூற்றாண்டு விழா கொண்டாட்டம் 26-12-2023](https://www.ccmhighschool.com/wp-content/uploads/2023/04/20231226_162757-230x230.jpg)
நூற்றாண்டு விழா சிறப்புமலர்
அன்புள்ள CCMHS இடையன்குடி பழைய மாணவர்களே, வணக்கம்!!
நமது பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்கின்றீர்கள். நன்றி. 100-வது ஆண்டு விழா மலர் வெகு சிறப்பாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அது எல்லோரிடமும் வைத்து பொக்கிசமாக காக்கவேண்டிய ஒன்றாகும்.
விளம்பரங்களும் வாழ்த்துக்களும் மலரில் கொடுக்க விரும்புவவர்கள் உடனடியாக பொருளாளரை போன் நம்பர் 9444042625 ல் தொடர்பு கொண்டு பணம் அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள். முழு பக்கம் கலர் ௹3000 மட்டுமே, மற்றும் கருப்பு வெள்ளை ௹1500 மட்டுமே. வியாபார விளம்பரங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்ப போட்டோவை போட்டு விழா சிறக்க வாழ்த்தலாம். உங்கள் நினைவுகள் என்றும் எல்லோருடனும் இருக்கும். 100-வது ஆண்டு விழா மலரில் குறிப்பிட்ட பக்கங்களே உள்ளன. முந்திக் கொள்ளுங்கள்.
டிசம்பர் 11-ம் தேதிக்குள் கொடுக்குமாறு மலர்குளு கேட்டுக் கொள்கிறது.
வணக்கம்.
வரும் சனிக்கிழமை 09.12.2023 இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி பழைய மாணவர் சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற உள்ளது. அதனோடு மருத்துவ முகாமும் நடைபெறும். இந்த பள்ளிக்கும் அண்மை கிராமங்களுக்கும் ஒரு நீண்ட நெடிய உறவு பன்னெடும் காலம் தொட்டு இருந்து வருகிறது. அண்மை கிராமங்களில் இருந்து இந்த கால்டுவெல் மேல்நிலை பள்ளியில் கல்வி பயின்று அரசு அதிகாரிகளாகவும், ஆசிரியராகவும், மருத்துவராகவும், வழக்கறிஞராகவும், அரசியல்வாதியாகவும், அருட் தந்தையாகவும், அருட் கன்னியராகவும், மத போதகராகவும் இன்னும் பல்வேறு துறைகளில் வேலை பார்க்கின்ற நம் சமுதாய மக்கள், நம் கிராமங்களில் தொடக்கக் கல்வி முடித்து அதன் பிறகு பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பயில நம் அரு காமையில் இருந்த ஒரே பள்ளி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி ஒன்றுதான். அந்தப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கத்தில் அனைத்து பக்கத்து ஊர் மக்களும் அங்கத்தினர்களாக உள்ளனர். நம் சமுதாய மக்கள் கல்வி பயில உறுதுணையாக இருந்த இந்தப் பள்ளியில் நடைபெறும் இந்த இரத்ததான முகாம் சிறப்பாக அமைய, நமது பங்களிப்பு கட்டயம் தேவை. நாம் இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்வது, நமது நன்றிக் கடனை காட்டுவது மட்டுமல்ல பொதுவாக இரத்த தானம் செய்வது நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மருத்துவ கூற்றுப் படி, ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூட நாம் இரத்த தானம் செய்யலாம். இதனால் நம் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இன்னொன்று நம் திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் நாளொன்றுக்கு 70 யூனிட் இரத்தம் நோயாளிகளின் அறுவை சிகிச்சைக்கு தேவைப் படுகிறது. பணம் கொடுத்து ரத்தம் வாங்க முடியாத ஏழை நோயாளி களுக்கு இலவசமாக நமது இரத்தம் கொடுக்கப் படும். கடவுளால் நமக்கு கொடுக்கப் பட்டுள்ள இந்த அரிய, மருந்து தயாரிக்கும் தொழிற் சாலையில் தயாரிக்க முடியாத இந்த இரத்தத்தை நாம் தானமாக கொடுக்க முன்வந்தால் இதைவிட மேலான தான தர்மம் ஒன்றும் இருக்க முடியாது.
எனவே வரும் சனிக்கிழமை 09.12.2023 இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த இரத்த தான முகாமில்
1. 18வயதுக்கு மேற்பட்ட 58 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண், இருவரும்,
2. இன்றிலிருந்து நாளை, அதற்கு மறு நாள் 3 நாள்கள் மது அருந்தாமல் ( மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள்) இருக்க வேண்டும்.
3. உடலில் இரத்த அளவு சரியாக ( ஹீமோகுளோபின் லெவல்) உள்ள யாரும்
இந்த இரத்த தான முகாமில் கலந்து கொண்டு, இதனை பிறருக்கு செய்யும் ஒரு சேவையாக கருதி, நம் சமுதாயத்தின் நன்றிக் கடனாக எண்ணி இரத்த தானம் செய்ய அழைக்கிறோம்.
குறிப்பு: நாம் இரத்தம் கொடுத்து 72 மணி (6நாட்களில்) அதே அளவு இரத்தம் நமது உடலில் உற்பத்தியாகும். எனவே பயம் கொள்ள தேவையில்லை
OBA நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்ட எல்லா முயற்சிகளையும் செய்துவருகிறோம். எல்லோரும் நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள். கூடன்குளம், பாளையம்கோட்டை, வள்ளியூர், ஆரல்வாய் மொழி, திசையன்விளை, சென்று பலரையும் சந்தித்தோம். எல்லோரும் இந்த நல்ல பணிக்கு இணைத்துகொண்டார்கள். மனபூர்வமாக நன்கொடை கொடுத்தார்கள். உங்களையும் சந்திக்கும்போது மனமுவந்து தாராளமாக கொடுக்க வேண்டுகிறேன். நூற்றாண்டின் நினைவாக பஸ் வாங்கிக் கொடுக்க உறுதி கொள்வோம்.
நன்றி. CCMHS OBA.
OBA CCMHS Idaiyangudi centenary celebration planning meeting was held on 14 -8-23. Nearly 50 members attended the meeting. All the members stand firm to celebrate the centenary function in a very grand manner. We planned to do the following activities for our function.
1. Competitions Drawing, Elocution, and Essay in our surrounding schools.
2. Essay competition for old students.
3. Field events for our school students
4 Guidance and counseling for higher education and jobs to nearby schools.
5. Free medical camp for the public
6. Blood donation camp.
7. Centenary magazine.
8. Special lunch for school our school children.
9. One set of uniforms for our school children.
10 Above all we are donating a 40 seater bus for our school which cost 25 lakhs
All will come true with our generous donations.
May God help us to do the task.
99 – வது ஆண்டுவிழா 26-12-2022
Moses Abraham Hall கட்டிடத் திறப்புவிழா 24-4-2023

நமது பழைய மாணவரும், நிறந்தர புரவலருமான திரு. ஏ.வி.தாமஸ் அவர்களின் குடும்பத்தினரால் நமது C.C.M. Hr.Secondary School,இடையன்குடிக்கு புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்ட Moses Abraham Hall கட்டிடத் திறப்புவிழா 24-4-2023 திங்கள் அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கல்வி ஆண்டு 2021-2022 க்கான சீருடை
நல்லாசிரியர் விருது

*வாழ்த்துகிறோம்*
நமது இடையன்குடி பழைய மாணவர் சங்க செயலர் திரு. P. சாமுவேல் அவர்கள், தமிழக அரசு வழங்கும் இந்த ஆண்டுக்கான (2021), டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்..
இது திரு P.சாமுவேல் அவர்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த பரிசு. இது நமது பழைய மாணவர் சங்கத்தின் உருப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் தருகிறது.
*திரு P.சாமுவேல் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம்*
P.சாமுவேல் அவர்களை இடையன்குடி பழைய மாணவர் சங்க கூட்டத்தில் பாராட்டி வாழ்த்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…..