பள்ளியின் தேசிய பசுமைப் படை 2025

பள்ளியின் தேசிய பசுமைப் படை 2025

இடையன்குடி சி.சி.எம் மேல்நிலைப் பள்ளியில் 08.09.2025 அன்று பள்ளியின் தேசிய பசுமைப் படை சார்பாக மரம் நடுவிழா கொண்டாடப்பட்டது.  மாணவர்கள் பள்ளிக்கென பல்வேறு மரம் மற்றும் செடி வகைகளைக் கொண்டு வந்திருந்தனர்.  மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதில் உள்ள நன்மைகளை தலைமை ஆசிரியர் எடுத்துரைத்தார்கள்.  உதவித்தலைமை ஆசிரியர், பசுமையே உலகின் தேவை என வலியுறுத்தினார்கள்.  மாணவர்கள் மரங்கள் நடுவதில்  மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். தொடர்ந்து மரங்களை நட்டு பராமரிப்போம் என உறுதி அளித்தார்கள்.  நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பசுமைப் படை பொறுப்பாசிரியர் ஜெபக்குமார் மற்றும் பசுமைப்படை உறுப்பினர்களாகிய மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

002 00121 22 23 24 25 26 27 28 29 30 31 32

வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 79-வது சுதந்திர தினம்.

வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில்  79-வது சுதந்திர தினம்.

சி.சி.எம் மேல்நிலைப் பள்ளியில் 18.08.2025 திங்கள் காலை கூட்டுப் பிரார்த்தனையில் பள்ளித் தாளாளர் திரு. ஜேகர் அவர்கள் கலந்து கொண்டு வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில்  79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கான கவிதை, ஓவியம், நடனம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
இதில்
12ம் வகுப்பு S. அதிசய ஜோஸ்லின் கவிதைப் போட்டியில் முதல் பரிசு
11 ம் வகுப்பு M. ஒவியா தனி நடனத்தில் முதல் பரிசு

அது மட்டுமல்லாமல் அனைத்து போட்டிகளிலும் அதிக புள்ளிகள் பெற்றமைக்காக ( OVERALL CHAMPIONSHIP ) சுழற்கோப்பையும் சி.சி.எம்.மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப் பட்டது.

இப் பரிசுகளை தாளாளர் வழங்க மாணவிகள் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பதை நோக்கம் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்டதற்காக சி.சி.எம். மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் குழுவிற்கு ( NSS VOLUNTEERING TEAM ) திருநெல்வேலி மாவட்ட அளவில் மூன்றாவது பரிசு மற்றும் ரூ. 5000 பெற்றதற்க்கான காசோலையை தாளாளர் வழங்க பள்ளியின் NSS ஒருங்கிணைப்பாளர் திரு. A. ஜான் சாமுவேல் ஆசிரியர் மற்றும் NSS மாணவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

தொடர்ந்து பரிசு பெற்ற மாணவ மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரிய பெருமக்களையும் தலைமையாசிரியர் அவர்கள் பாராட்டினார்கள்.

036 035 033 034 032 031 030

003

 

District volleyball held on 1st September 2025

District volleyball held on 1st September 2025

District volleyball match was held under-17 boys on 1st September 2025, at Anna Stadium. 12 players are selected for state state-level match. This match will be held at Trichy.

Under-17 girls Beach volleyball match was also held on the same day at Anna Stadium. 3 girls were selected for state state-level match.

Chief Minister Trophy was held at Anna Stadium in Tirunelveli on 6th September. Our senior boys’ volleyball team got second place at the district level. Each player gets Rs 2000, and 2 students were selected for state state-level match ( Zarook 12th A, Armstrong 12th A ). This match will be held at Nehru Stadium in Chennai.

043 042 041 040

 

79-வது இந்திய சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் 15th August 2025

79-வது இந்திய சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் 15th August 2025

அனைவருக்கும் 79வது சுதந்திர தினவிழா நல்வாழ்த்துகள்.      இன்று நமது பள்ளியில் (15.08.2025) சுதந்திரதினவிழா நிகழ்வு கோலாகலமாகக்கொண்டாடப்பட்டது.   முதுகலை தமிழாசிரியர் பெசிமா அவர்களின் இறைவேண்டலுடன் விழா ஆரம்பித்தது.   உதவித்தலைமைஆசிரியர் ஜாண் சாமுவேல் அவர்கள் வேதப்பகுதியை வாசித்தார்கள்.    79வது சுதந்திர தின விழாக்கொடியினை நம் பள்ளியின் தாளாளர் திரு.ஜேகர் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.    தலைமைஆசிரியர் திரு.வெஸ்லி சாலமோன் அவர்கள் தலைமை உரையாற்றினார்கள்.  பட்டதாரி தமிழாசிரியர் சாமுவேல் ஜெபக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றி  விழா நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார்கள்.    தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றது.   மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.   பள்ளியின் ஓவிய ஆசிரியர் சாமுவேல் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.    கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.  விழா இனிதே நிறைவுபெற்றது.

 

019020021018 017 016 015 14 014 13 013 12 012 11
010 09 009 08 008 07 007 06 006 05 005 04 004 03 003