கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளி, இடையன்குடி
இக்கல்வி நிறுவனம் முதன் முதல் நடுநிலைப் பள்ளியாக 1844-ம் ஆண்டு மகா கனம் கால்டுவெல் பேராயர் அவர்களால் நிறுவப்பட்டது . ஆண்களும் பெண்களுமாக 200 பேர் விடுதியில் இருந்து கல்வி பயின்று வந்தனர். 1911-ம் ஆண்டு உயர்தர தொடக்கப் பள்ளியாக மாற்றப் பட்டது. காலஞ்சென்ற கனோன் கோயில் பிள்ளை ஐயர் அவர்கள் இப்பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் முயற்சி எடுத்தார்கள். அவர்களின் விடா முயற்சியாலும் உயர்திரு A. V. தாமஸ் அவர்களின் பண உதவியாலும் 1941-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி அடிக்கல் நாட்டி கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப் பட்டது. அனைவரின் ஒத்துழைப்பினால் 1942-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ம் நாள் உயர் நிலை பள்ளி நிறுவப் பட்டது.